Sunday, December 12, 2010

உலக வரலாற்றில் முதன்மை இடத்தில் facebook

சோஷியல் நெட்வேர்க்களின் பரம்பல்களினை உலக நாடுகளின் அடிப்படையில் காட்டும் ஒரு வரைபடத்தினை vincos இணைய தளம் வெளியிட்டுள்ளது. எங்கள யாராலயும் அசைக்கமுடியாது என்று ஃபேஸ்புக் நிரூபித்து நிற்க ஆங்காங்கே ஓர்குட் , Hi5, iwiw என ஏனைய இணைய தளங்களும் காணப்படத்தான் செய்கிறது.

Wednesday, December 1, 2010

இன்னுமோர் சோஷியல் நெட்வேர்க் - Jumo

சோஷியல் நெட்வேர்க் என்றாலே ஃபேஸ்புக் தான் என்று சொல்லுமளவுக்கு ஃபேஸ்புக் வளர்ச்சி கண்டுள்ளது. இந்த ஃபேஸ்புக்கினை உருவாக்கியவர்களில் ஒருவரான Chris Hughes இன்று மற்றுமொரு சமூக வலைப்பின்னல் இணைய தளம் ஒன்றை தொடங்கிவைத்துள்ளார். Jumo என்ற பெயருடன் அறிமாகியிருக்கும் இந்த சோஷியல் நெட்வேர்கானது ஃபேஸ்புக்கினை போலில்லாமல் ஒரு சமூக சேவை சார்ந்த நோக்கத்திற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது। இது ஒரு இலாப நோக்கம்மற்ற நிறுவனமாக அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஜூமோ மூலம் சமூக நோக்கம் சார்ந்த நல்ல விடயங்களுக்கான ஆதரவினை வழங்க முடியும்.இந்த புதிய இணைய தளத்தில் Projects , Issues என்று இரண்டு எண்ணக்கருக்கள் உள்ளன. உதாரணமாக ”அனைவருக்கும் கல்வி” ”வறுமையை ஒழிப்போம்” “Freelancer union” “Freedom of speech” என்று காணப்படுகிறது. இந்த Projects , Issues என்பவற்றை பின்தொடர்ந்து அவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்யமுடியும்.இந்த Jumo இணைய தளமானது Beta பதிப்பாகவே வெளிவந்துள்ளது. தற்போதைக்கு ஃபேஸ்புக் கணக்கினை வைத்திருப்பவர்களே இந்த தளத்தினை உப்யோகிக்க முடியும். எதிர்காலத்தில் அனைவராலும் இந்த சோஷியல் நெட்வேர்க்கினை பயன்படுத்த முடியும் என Jumo குழுவினர் தெரிவித்துள்ளனர்.இது ஃபேஸ்புக் இணைய தளத்திற்கு மாற்றீடான தளமாக இல்லாமல் ஃபேஸ்புக் இணைய தளத்தில் இல்லாத ஒரு விடயத்தை தேடி jumo பயணிக்கவுள்ளது. அதாவது ஃபேஸ்புக் பாவனையாளர்களிடம் காணப்படும் விளையாட்டுத்தனத்தை(fun ) நீக்கி சில ஆக்கபூர்வமான விடயங்களை நோக்கி மக்களை அழைத்துச் செல்ல இருக்கிறது

Wednesday, November 3, 2010

பேஸ்புக் தகவல்

உலகளவில் பிரபல்யமான ஃபேஸ்புக் சோஷியல் face book social network நெட்வேர்க் ஜப்பான் மக்களை கவரவில்லையா?? உலக இணையப் பாவனையாளர்களின் அடிப்படையில் 2ம் இடத்திலிருக்கும் ஃபேஸ்புக் இணைய தளம் , ஜப்பானில் 21ம் இடத்தில் (Alexa Report) உள்ளது.


காரணம் என்னவாக இருக்கும்.. ஒன்னுமே புரியல்லையே.. ஜப்பானைப் வாசிகளே? என்னதான் காரணம். இது போல் இங்கயும் பெரிசா பின்னுக்குத்தான் இருக்காங்க..

Russia 13

Iran 47

உங்கள் ஐடியாக்களை கூகிளிற்கு சொல்லுங்கள்

நீங்கள் கூகிள் டாஸ்க்ஸ் (tasks) பாவனையாளரா?? நீங்கள் என்னன்ன வசதிகளை டாஸ்கிடமிருந்து எதிர்பார்க்குறீர்கள் என்பதை கூகிள் கேட்கிறது. உங்கள் மேலான ஆலோசனைகளை November 19ம் திகதிக்கு முன்னர் கூகிளிற்கு சமர்ப்பியுங்கள். உங்களால் வழங்கப்படும் ஒவ்வொரு ஐடியாவும் ஆலோசனையும் கூகிளினால் பரிசீலிக்கப்படும் என கூகிள் தெரிவித்துள்ளது.


உங்களால் முடிந்த பங்களிப்பை கூகிளிற்கு வழங்க இந்தமுகவரிக்கு செல்லுங்கள்.

Google Online Marketing challenge 2011

“Google Online Marketing challenge 2011 ” போட்டி நிகழ்ச்சிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது. சந்தைப்படுத்தல் துறையில் ஆர்வமுள்ள உயர்கல்வியை தொடரும் மாணவர்கள் இந்த போட்டி நிகழ்ச்சியில் பங்கு கொள்ளலாம். கடந்த வருடம் இடம்பெற்ற போட்டியில் 60 நாடுகளிலிருந்து 12000 க்கு மேலான மாணவர்கள் பங்குகொண்டிருந்தார்கள் எனவும் இந்த வருடம் இதற்கும் அதிகமான மாணவர்களை எதிர்பார்ப்பதாகவும் கூகிள் தெரிவித்துள்ளது

உயர்கல்வியை தொடரும் எந்த துறைச் சேர்ந்த மாணவர்களும் இந்த போட்டியில் பங்குகொள்ளலாம். குழுக்களாகவே இந்தப் போட்டியில் பங்கு கொள்ள வேண்டும். ஒரு குழுவில் 3 தொடக்கம் 6 வரையான மாணவர்கள் பங்கு கொள்ள முடியும். பதிவுகளுக்கான இறுதித் திகதி January 14, 2011 ஆகும்.

இது தொடர்பான முழுமையான தகவலினை கூகிளின் வலைப்பதிவில் காணவும். இந்தச் செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் எத்திவையுங்கள்.

Thursday, October 28, 2010

புதுப் பொலிவுடன் யாஹூ மெயில் [உத்தியோகபூர்வமானது]

Yahoo நிறுவனத்தின் மின்னஞ்ஞல் சேவையை புதுப்பிக்க இருப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதற்கமைய தனது புதிய பீடா(Beta) பதிப்பினை உலகம் பூராகவும் பாவனைக்கு விட்டுள்ளது. எனவே இப்போது உங்கள் வேலை என்ன வென்றால் புதிய யாஹூ மெயிலினை பரிசோதித்து பார்ப்பதே.


புதிய யாஹூ மெயிலை பரிசோதிக்க இந்த முகவரியினூடாக செல்க.. இது தொடர்பான மேலதிக தகவலினை அறிய இந்த வர்ணமயமான பக்கத்திற்குசெல்லுங்கள்.


Yahoo நிறைவேற்று அதிகாரி தற்போது E-bay இணைய தளத்தில்

ebay நிறுவனம் Neal Sample என்பவரை “ebay marketplace” க்கான Vice president ஆக நியமித்துள்ளது. Neal Sample கடந்த காலங்களில் யாஹூ நிறுவனத்தில் பல முக்கிய பதிவிகளை வகித்தவர் என்று தெரியவருகிறது. இறுதியாக இவர் Yahoo வின் open, social and participation platforms க்கான Vice president ஆக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Neal Sample இனி ebay ன் Marketplace இனுடைய வடிவமைப்பில் தனது பங்குபற்றலை மேற்கொள்வார் என தெரியவருகிறது.

இந்தச் செய்தியை தமிழில் தருவது மிகக் கடினமாக உள்ளது. இது தொடர்பான செய்தியை இந்த ஆங்கில இணைய தளத்தில் காண்க.