Thursday, October 28, 2010

புதுப் பொலிவுடன் யாஹூ மெயில் [உத்தியோகபூர்வமானது]

Yahoo நிறுவனத்தின் மின்னஞ்ஞல் சேவையை புதுப்பிக்க இருப்பதாக கடந்த மாதம் அறிவித்திருந்தது. அதற்கமைய தனது புதிய பீடா(Beta) பதிப்பினை உலகம் பூராகவும் பாவனைக்கு விட்டுள்ளது. எனவே இப்போது உங்கள் வேலை என்ன வென்றால் புதிய யாஹூ மெயிலினை பரிசோதித்து பார்ப்பதே.


புதிய யாஹூ மெயிலை பரிசோதிக்க இந்த முகவரியினூடாக செல்க.. இது தொடர்பான மேலதிக தகவலினை அறிய இந்த வர்ணமயமான பக்கத்திற்குசெல்லுங்கள்.


Yahoo நிறைவேற்று அதிகாரி தற்போது E-bay இணைய தளத்தில்

ebay நிறுவனம் Neal Sample என்பவரை “ebay marketplace” க்கான Vice president ஆக நியமித்துள்ளது. Neal Sample கடந்த காலங்களில் யாஹூ நிறுவனத்தில் பல முக்கிய பதிவிகளை வகித்தவர் என்று தெரியவருகிறது. இறுதியாக இவர் Yahoo வின் open, social and participation platforms க்கான Vice president ஆக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Neal Sample இனி ebay ன் Marketplace இனுடைய வடிவமைப்பில் தனது பங்குபற்றலை மேற்கொள்வார் என தெரியவருகிறது.

இந்தச் செய்தியை தமிழில் தருவது மிகக் கடினமாக உள்ளது. இது தொடர்பான செய்தியை இந்த ஆங்கில இணைய தளத்தில் காண்க.

Tuesday, October 19, 2010

YouTube Leanback [உத்தியோகபூர்வமானது]


YouTube இணைய தளம் புத்தம் புதியதொரு சேவையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. YouTube Leanback என்பதே இதன் பெயர். இந்த Leanbackல் YouTube வீடியோக்கள் மிகத்துல்லியமானதாகவும் முழுத்திரையிலும் காண்பிக்கப்படும் என்பதே இதன் சிறப்பம்சமாகும். நீங்கள் Leanback இனை விசிட் செய்யும் போது தொலைக்காட்சிகளைப் போன்று தானாகவே வீடியோக்கள் காண்பிக்கப்படும். கீ-போர்டின் அம்புக்குறிகளைக் கொண்டு உங்கள் விருப்பத்துற்கமைய வீடியோக்களை மாற்றிக் கொள்ளலாம்


இங்கு காண்பிக்கப்படும் வீடியோக்களின் தெரிவை மாற்ற விரும்பினால் Arrow key இனை பயன்படுத்தி மாற்றிக் கொள்ளலாம். இந்த வீடியோத்தெரிவுகள் உங்கள் கடந்த கால பாவனையைக் கொண்டும் நீங்கள் சப்ஸ்க்ரைப் பண்ணியிருக்கும் வீடியோக்களைக் கொண்டும் தீர்மானிக்கப்படும் என யுடியூப் தெரிவித்துள்ளது.

Monday, October 18, 2010

Skpye 5.0 உடன் தற்போது Facebook

பேஸ்புக் மற்றும் ஸ்கைப் இணைவு தொடர்பான செய்தியை உத்தியோகபற்றற்ற நிலையில் வெளியிட்டிருந்தோம்.

ஆனால் தற்போது ஸ்கைப்பின் விண்டோஸுக்கான புதிய 5.0 தொகுப்பில் பேஸ்புக் 'டெப்' இணைக்கப்பட்டுள்ளது. இதனோடு் பேஸ்புக் மற்றும் ஸ்கைப் ஆகிய சேவைகள் இணைந்துள்ளன.
இனிமேல் ஸ்கைப்பில் இருந்து பேஸ்புக் நண்பர்களுக்கு நேரடியாக அழைப்பினை மேற்கொள்ளமுடிவதுடன் எஸ்.எம்.எஸ் செய்யவும் முடியும்

மேலும் பேஸ்புக்கில் ஸ்டேடஸ் அப்டேட்டிங் (Status updating) , கமெண்ட்ஸ் ( Comments) செய்யவும் முடியும்.

இது ஆரம்பம் மட்டுமே எனவும் சிறிது காலத்தில் பல வசதிகள் அறிமுகப்படுத்தப்படுமெனவும் அந்நிறுவங்கள் தெரிவிக்கின்றன.

ஸ்கைப் 5.0 தொகுப்பினை இங்கு தரவிறக்கம் செய்யலாம்.


Wednesday, October 13, 2010

கூகுள் 'ஸ்ட்ரீட் வியூ' ( Google street view )

கூகுளின் சேவைகளின் ஒன்றான கூகுள் 'ஸ்ட்ரீட் வியூ' ( Google street view ) பல நாடுகளில் சர்ச்சைக்குள்ளானதும் , பலரால் வரவேற்கப்படுவதுமான ஒரு சேவையாகும். இது தற்போது அண்டார்டிக்கா கண்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.

கூகுள் 'ஸ்ட்ரீட் வியூ' என்பது உலக நகர வீதிகளின் அமைவிடங்களைப் புகைப்படங்களாகக் காண்பிக்கும் ஒரு தொழில்நுட்பமாகும்.

2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இச்சேவை, தற்போது 25 நாடுகளைக் கொண்டுள்ளது.

மேற்படி சேவையானது உலகின் பெரும்பாலான முன்னணி மற்றும் பின்தங்கிய நகரங்களின் புகைப்படங்களைக் காண்பிக்கின்றது. இவற்றுள் நகர வீதிகள் , வீடுகள், வியாபார ஸ்தாபனங்களின் அமைவிடங்கள் போன்றவை அடங்குகின்றன.

தற்போது இச்சேவையானது அண்டார்டிக்கா கண்டத்திற்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அச்சேவை உலகின் 7 கண்டங்களையும் உள்ளடக்குகின்றது.

தற்போதைக்கு சேவை மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலேயே காணப்படுமெனவும் பிறகு விஸ்தரிக்கப்படுமெனவும் கூகுள்
அறிவித்துள்ளது.

சமூகவலைப் பின்னல்களில் அதிக நாட்டம்

சமூகவலைப் பின்னல் தளங்களில் அதிக நண்பர்களைக் கொண்டிருப்பவர்கள் மலேசியர்கள் எனவும் குறைவாகக் கொண்டிருப்பவர்கள் ஜப்பானியர்கள் எனவும் புதிய ஆய்வொன்று தெரிவிக்கின்றது.

மேலும் ஈ-மெயில் பாவனையானது காலங்கடந்து விட்டதாகவும் அவ்வாய்வு தெரிவிக்கின்றது.

பிரித்தானியாவைச் சேர்ந்த நிறுவனமொன்று சுமார் 46 நாடுகளில் 50,000 பேரிடம் மேற்படி ஆய்வினை நடத்தியிருந்தது.

இவ்வாய்வின் முடிவுகளின் படி இணையப் பாவனையாளர்களில் அதிகமானோர் மின்னஞ்சல் பாவனையைவிட 'பேஸ்புக்' மற்றும் 'லிங்டின்' போன்ற சமூக வலைப்பின்னல் தளங்களில் வெகு நேரத்தைச் செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் லத்தீன் அமெரிக்கா, மத்தியகிழக்கு, சீனா போன்ற நாடுகளில் சமூக வலைப் பின்னல்கள் வேகமாக வளர்ச்சியடைந்துள்ள போதிலும் அங்கே கணிசமானோர் மின்னஞ்சலை உபயோகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

மலேசியர்கள் சராசரியாக 233 மற்றும் பிரேஸிலியர்கள் 231 நண்பர்களையும் சமூகவலைப் பின்னல் தளங்களில் கொண்டுள்ளனர். ஜப்பானியர்கள் சாராசரியாக 29 நண்பர்களைக் கொண்டுள்ளனர்.

சீனாவில் இணையப் பாவனையாளர்களில் ஐந்தில் ஒருவர் அதாவது 88 % மற்றும் பிரேஸிலியர்களில் 51 % வலைப்பதிவில் எழுதுகின்றனர். இது அமெரிக்காவை விட 32 % அதிகமாகும்.

இது மட்டுமல்லாமல், தொலைக்காட்சி, பத்திரிகை, வானொலி ஆகியவற்றின் பாவனை வெகுவாக குறைந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கைத்தொலைபேசிகளின் மூலம் சமூகவலைப் பின்னலை உபயோகிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென் பொருட்கள்

உலகில் அதிகமாக உபயோகிக்கப்படும் மென்பொருட்கள், சமூக இணையத்தளங்கள் மற்றும் இதர சேவைகளின் பாவனையாளர்களின் எண்ணிக்கை தொடர்பான ஆய்வொன்றினை பிரபல நிறுவனமொன்று நடத்தியுள்ளது.

இப் புள்ளிவிபரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அந்நிறுவனம் இந்த எண்ணிக்கையானது தொடர்ந்து மாற்றமடைந்து வருவதனால் உத்தேச அளவில் இதனை வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

இப்புள்ளிவிபரமானது கடந்த கால அறிக்கைகள் மற்றும் ஆய்வுகளையும் அடிப்படையாகக் கொண்டது.

அதன் படி

1) டுவிட்டர் - 200 மில்லியன் பாவனையாளர்கள்.

பிரபல சமூக மற்றும் மைக்ரோ புளகிங் தளமான டுவிட்டர் வேகமாக மொத்தமாக 200 மில்லியன் பாவனையாளர்களைக் கொண்டுள்ளதுடன் வேகமாக வளர்ந்து வரும் ஒரு தளமாகும்.

2) விண்டோஸ் லைவ் மெசெஞ்சர் - 305 மில்லியன் பாவனையாளர்கள்

உலகின் மிகப்பெரிய மெசெஞ்சர் சேவையான இது, தற்போது ஸ்கைப் மற்றும் பேஸ்புக் என்பனவற்றினால் பெரிய பின்னடைவைச் சந்தித்து வருகின்றது.

3) பேஸ்புக்- 510 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் தற்போது அதிகமாக பேசப்பட்டு வரும் தளம் இது. மிகவும் வேகமாக வளர்ந்து வரும் ஒரு சமூக வலைப்பின்னல் தளமுமாகும்.

4) ஸ்கைப் - 530 மில்லியன் பாவனையாளர்கள்

உலகில் அதிக பாவனையாளர்களைக் கொண்ட வி.ஒ.ஐ.பி எனப்படும் இணைய மூலமான தொலைபேசி சேவையினை வழங்கும் நிறுவனம் இது.

5) எபல் ஐ டியூன் - 800 மில்லியன் பாவனையாளர்கள்

அப்பிள் நிறுவனத்தின் இசைசார்ந்த மென்பொருளான இது, உலகம் முழுவதும் மிகப்பிரபலம் பெற்றது.

FACEBOOKகின் நவீன குரூப்ஸ் வசதி

பேஸ்புக் பாவனையாளர்கள் அனைவரும் அதிக அக்கறை கொள்ளும் விடயம் ' ப்ரைவசி' ஆகும். நாம் பொதுவாக விடயங்களை, தகவல்களை அல்லது புகைப்படத்தினை நமது பேஸ்புக் நண்பர்களிடையே பகிர்கின்றோம்.

எனினும் குறிப்பிட்ட சில செயற்பாடுகளைக் குறித்த சிலரிடையே மட்டும் பகிர விரும்புவதுண்டு. இவ் விடயத்தினை கருத்திற் கொண்டு புதிய ' குரூப்ஸ் ' வசதியினை பேஸ்புக் வழங்கியுள்ளது.

ஏற்கனவே பேஸ்புக்கில் இது போன்றதொரு வசதி உள்ள போதிலும் 5 % குறைவான பாவனையாளர்களே இதனை உபயோகிப்பதாகவும் ஆனால் இவ்வசதியானது பல பாவனையாளர்களால் உபயோகிக்கப்படுமெனவும் அதன் நிறுவுனர் ஸுக்கர் பேர்க் தெரிவிக்கின்றார்.

தற்போது இவ்வசதியின் மூலம் நீங்கள் விரும்பிய சிலரிடையே மட்டும், அதாவது விருப்பமான குழுவினரிடையே மட்டும் தகவல்களைப் பகிரலாம்.

இதன் மூலம் நண்பர் வட்டத்தினிடையே, குடும்ப உறுப்பினர்களிடையே தகவல் பரிமாற்றத்தினை மேற்கொள்ளமுடியும்.

மேலும் அக் குழுவினரிடையே 'சாட்டிங்' , குரூப் 'மெசேஜிங்' மற்றும் குரூப் 'மெயிலிங்' வசதிகளும் இதில் உள்ளன.

இதன் மூலம் பாதுகாப்பாக விடயங்கள் பகிரப்படுவதோடு நமது ' ப்ரைவசி' மேலும் பாதுகாக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது

அசுர வளர்ச்சியடைந்து வரும் குரோம் : தடுமாறும் எக்ஸ்புளோரர்!

கூகுளின் குரோம் இயங்குதளமானது அசுரவேகத்தில் வளர்ந்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இயங்குதளமானது தனது ஆதிக்கத்தினை தொடர்ந்து இழந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது அதன் பாவனை வீதம் 50 % குறைவாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 2003 ஆம் ஆண்டளவில் இது 83% இயங்குதள சந்தையை கொண்டிருந்தது.

ஃபயர்பொக்ஸ் இயங்குதளம் ஏற்ற இறக்கங்கள் இன்றி தனது இடத்தினை தக்கவைத்துள்ளது.

2008 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் கூகுள் குரோமானது இண்டர் நெட் எக்ஸ்புளோரரை வேகமாக முந்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது இண்டர் நெட் எக்ஸ்புளோரர் தனது 9 ஆவது தொகுப்பினையே பெரிதும் நம்பியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

குரோமின் வளர்ச்சியானது பயர்பொக்ஸினையும் பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சேவையேன்பதிற்கு அப்பால் இயங்குதளங்கள் பெரிய வர்த்தக நடவடிக்கையென்பது குறிப்பிடத்தக்கது

Monday, October 11, 2010

கூகுளின் தானியங்கிக் கார்

கூகுள் நிறுவனம் தானாக இயங்கக்கூடிய கார் ஒன்றினை பரிசோதித்து வருவாக அறிவித்துள்ளது.
சுயமாக காரினை செலுத்தும் இத்தொழில்நுட்பமானது செயற்கை அறிவாண்மை ( Artificial Intellligence) மென்பொருளின் மூலம் வாகனங்களைக் கட்டுப்படுத்தும் முறையாகும்.

காரின் மேற்பகுதியில் புனல் போன்ற சிலிண்டர் அமைப்பு பொருத்தப்பட்டுள்ளது. இது காரின் கண்போன்று தொழிற்படுகின்றது.

இக்கார்கள் வீடியோக் கெமராக்கள், ராடார் சென்ஸர்கள், லேஸர் தொழில்நுட்பங்கள் மூலம் போக்குவரத்து நெரிசல் நிலைமைகளை அறிந்து கொள்கின்றன.

இச்செயற்கை அறிவாண்மை தொழில்நுட்பத்தின் மூலம் வீதிவிபத்துக்களைப் பாதியாக குறைக்க முடியுமென கூகுள் தெரிவிக்கின்றது.

கூகுள் இக்காரை பல்வேறு நகரங்களில் பல கிலோ மீட்டர்கள் செலுத்தி ஆய்வு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இக்கார்களுக்கு பல்வேறு அமைப்புக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.